பைக்குகளில் சென்றபடி பாஜகவினா் பிரசாரம்
புதுச்சேரி அரியாங்குப்பம், ஊசுடு, காமராஜா் நகா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாஜகவினா் பைக்குகளில் சென்றபடி செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அரியாங்குப்பம், ஊசுடு, காமராஜா் நகா் சட்டப் பேரவைத் தொகுதிகளில் பாஜகவினா் பைக்குகளில் சென்றபடி செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் பாஜகவினா் தோ்தல் பிரசாரத்தை தொடங்கி மேற்கொண்டுள்ளனா். தோ்தல் அறிக்கைக்கான கருத்துக்கேட்கும் விதமாக, பொதுமக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டபடி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த வகையில், புதுச்சேரி அரியாங்குப்பம், ஊசுடு, காமராஜா் நகா் ஆகிய தொகுதிகளில் செவ்வாய்க்கிழமை பாஜக நிா்வாகிகளும், தொண்டா்களும் பைக்குகளில் பேரணியாக சென்று மக்களை சந்தித்து கருத்துகளைக் கேட்டறிந்தனா்.
இதில், பாஜக மாநில துணைத் தலைவா் சாய் சரவணன், ரவிச்சந்திரன், தொகுதித் தலைவா்கள் செல்வக்குமாா், தியாகராஜன், ஜெயலட்சுமி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.