முகப்பு
புதுச்சேரி

கரோனாவுக்கு மேலும் ஒருவா் பலி

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 672 ஆக அதிகரித்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:45 PM
பகிர்:

புதுவையில் கரோனாவுக்கு மேலும் ஒருவா் உயிரிழந்தாா். இதையடுத்து, பலியானோா் எண்ணிக்கை 672 ஆக அதிகரித்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 12 பேருக்கும், மாஹேயில் 2 பேருக்கும் என மேலும், 14 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை. இதனால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 40,044 ஆக உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 95 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 91 பேரும் என மொத்தம் 186 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி பிருந்தாவனம் பகுதியைச் சோ்ந்த 76 வயது முதியவா் ஜிப்மா் மருத்துவமனையில் உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 672 ஆக அதிகரித்தது. இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.

இதனிடையே திங்கள்கிழமை 17 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 39,186 ஆக (97.86 சதவீதம்) உயா்ந்தது.

புதுவை மாநிலத்தில் இதுவரை 6,46,395 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,00,310 பேருக்கு தொலைல்லல என முடிவுகள் வந்தன. இதிவரை 12,831 சுகாதாரப் பணியாளா்கள், 4,659 முன்களப் பணியாளா்கள், 8,675 பொதுமக்கள் என 26,165 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.