புதுச்சேரி

புதுச்சேரியில் பாமக தனித்துப் போட்டி

புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

DIN


புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி பாமக தனித்துப் போட்டியிடுவதாக அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக-அதிமுக 14 தொகுதிகளிலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்தானது. 

பாஜகவுடன் அதிமுக தொகுதிகளைப் பங்கிட்டுக்கொள்வதில் சிக்கல் நிலவி வந்தது. இதுகுறித்துப் பேசி முடிக்கப்பட்டு, பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக செவ்வாய்க்கிழமை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கூட்டணியில் பாமக தங்களுக்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தது. ஆனால், தேசிய ஜனநாயக கூட்டணித் தலைமை பாமகவை புறக்கணித்து வந்தது.

இந்நிலையில், பாமக சார்பில் தனித்துப் போட்டியிட முடிவு செய்து அக்கட்சியின் மாநில அமைப்பாளர் தன்ராஜ் 9 வேட்பாளர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை புதன்கிழமை வெளியிட்டுள்ளார். அவர்கள் இன்றும், நாளையும் மனு தாக்கல் செய்கின்றனர் என்று தன்ராஜ் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! மீனாட்சியம்மன் கோயிலில் ஐந்து நடராஜர் தரிசனம்

ஊமைக்குக் குரல் கொடுத்த உத்தமராயப் பெருமாள்!

எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

வாணியம்பாடியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

SCROLL FOR NEXT