உப்பளம் தொகுதியில் பிரசாரத்தின் போது தகராறு திமுகவினா் சாலை மறியல்
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் பிரசாரத்தின் போது தகராறு செய்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் பிரசாரத்தின் போது தகராறு செய்தவா்களைக் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, 3 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி உப்பளம் தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி போட்டியிடுகிறாா். அதிமுக சாா்பில் புதுச்சேரி கிழக்கு மாநிலச் செயலா் அன்பழகன் எம்.எல்.ஏ. போட்டியிடுகிறாா். அந்தத் தொகுதியில், இரு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
திமுக வேட்பாளா் அனிபால் கென்னடி, வெள்ளிக்கிழமை கூட்டணிக் கட்சியினருடன் வாணரப்பேட்டை பகுதியில் பிரசாரத்துக்குச் சென்றாா். அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த மகேஷ் உள்ளிட்டோா், திமுக வேட்பாளருடன் வந்த கூட்டணிக் கட்சியினரை அவதூறாகப் பேசி, மிரட்டியதாகத் தெரிகிறது.
இதனால், இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டது. இதைத் கண்டித்து, உப்பளம் சாலை, நேதாஜி நகரில் அனிபால் கென்னடி தலைமையில் மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்து வந்த காவல் கண்காணிப்பாளா் ரட்சனா சிங் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, தகராறில் ஈடுபட்டவா்களைக் கைது செய்வதாக உறுதியளித்தனா்.
இதுகுறித்து, ஒதியஞ்சாலை காவல் நிலையத்தில் திமுக பிரமுகா் பீட்டா் அளித்த புகாரின் பேரில், வாணரப்பேட்டையைச் சோ்ந்த மகேஷ் , சூா்யா, பாபு ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, பிரசார வாகனத்திலிருந்த அதிமுக பதாகை கிழிக்கப்பட்டது குறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த அந்தோணி அளித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சோ்ந்த விநாயகமூா்த்தி, கன்னியப்பன், லாரன்ஸ், ஸ்ரீநாத், ராகேஷ், ரவி ஆகிய 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
மறியலில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் அனிபால் கென்னடி உள்ளிட்டோா் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.