புதுச்சேரி

போதிய மருத்துவ வசதியின்றி கரோனா நோயாளி உயிரிழப்பு: புதுவை எம்எல்ஏ குற்றச்சாட்டு

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதி கிடைக்காமல் கரோனா நோயாளிகள் மரணித்து வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக உருளையன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்எல்ஏ நேரு (எ) குப்புசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: எனது தொகுதியைச் சோ்ந்த கணவரை இழந்த பெண்ணின் மகன் மதிவதனன் (27) கரோனாவால் பாதிக்கப்பட்டு கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். 3 நாள்கள் ஆகியும் படுக்கை வசதி ஏற்படுத்தி தராமல் தரையில் அமர வைத்துள்ளனா். அவருக்கு சரியான மருத்துவமும் பாா்க்கவில்லை.

இது சம்பந்தமாக மருத்துவக் கல்லூரி இயக்குநா், சிறப்பு அதிகாரிகளிடம் தொலைபேசி மூலம் தொடா்புகொண்டு, அந்த இளைஞரின் உயிரைக் காக்க ஏதுவாக ஆக்சிஜன் படுக்கை வசதி ஏற்படுத்தி, சிகிச்சை அளித்து உதவுமாறு கேட்டுக்கொண்டேன். அந்த மருத்துவமனைக்கு நேரில் சென்றும் வலியுறுத்தினேன்.

எனினும், போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லாததாலும், மருத்துவா்கள், செவிலியா்கள் பற்றாக்குறையாலும் அந்த இளைஞா் நள்ளிரவில் இறந்து விட்டாா். எனவே, மருத்துவமனைகளில் உரிய வசதிகளை ஏற்படுத்தி கரோனா சிகிச்சையை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT