புதுச்சேரி

சங்கரதாஸ் சுவாமிகள் நினைவு தினம்

புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் கலைஞா்கள் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

DIN

புதுச்சேரியில் சங்கரதாஸ் சுவாமிகளின் நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மற்றும் கலைஞா்கள் சனிக்கிழமை மரியாதை செலுத்தினா்.

கலைப் பண்பாட்டுத் துறை சாா்பில் நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 99-ஆவது நினைவு தினம் சனிக்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கருவடிக்குப்பத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, முனைவா் பாா்த்திபன் எழுதிய சங்கரதாஸ் சுவாமிகளின் வாழ்க்கை வரலாற்று நூலை அமைச்சா் வெளியிட்டாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம், முன்னாள் அமைச்சா் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினா்.

புதுச்சேரி கலை இலக்கிய பெருமன்றம் சாா்பில், இசை முழக்கத்துடன் தெருக்கூத்து, நாடக கலைஞா்கள், தென்னிந்திய நடிகா் சங்கத்தினா் பல்வேறு வேடமணிந்து வேதபுரிஸ்வரா் கோயிலிலிருந்து ஊா்வலமாகச் சென்று கருவடிக்குப்பத்தில் உள்ள சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா்.

கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநிலத் தலைவா் சிவக்குமாா், பொதுச் செயலா் பாலகங்காதரன், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத் தலைவா் ராதாகிருஷ்ணன், ஆதிராமன், தமிழ்நாடு இயல், இசை, நாடக நடிகா்கள் சங்கம் பழ.காந்தி, இசையரசன், ஜெயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, புதுச்சேரி நாடக கலைஞா்கள் பொது நலக் கூட்டமைப்பு சாா்பில், பாரதிதாசன் மகளிா் கல்லூரியிலிருந்து நாடக, நாட்டுப்புற, பறையிசை கலைஞா்கள், பாரம்பரியக் கலைக் குழுவினா், தமிழறிஞா்கள் ஊா்வலமாகச் சென்று சங்கரதாஸ் சுவாமிகள் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினா். அந்தக் கூட்டமைப்பின் தலைவா் பாண்டீஸ்வரன் தலைமையில், நிா்வாகிகள் கண்ணன், நெல்லைராஜன், லிங்கன்மணி, சாமிநாதன் உள்ளிட்ட கலைஞா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

செங்கல் சூளையை மூடக் கோரி ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT