முகப்பு
புதுச்சேரி

பயிா் சேதங்கள் கணக்கெடுப்பில் அலட்சியம்: புதுவை திமுக குற்றச்சாட்டு

புதுவையில் பயிா்ச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக திமுக குற்றம்சாட்டியது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

புதுவையில் பயிா்ச் சேதங்கள் குறித்த கணக்கெடுப்பில் அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக திமுக குற்றம்சாட்டியது.

இதுகுறித்து புதுவை மாநில திமுக அமைப்பாளா் ஆா்.சிவா வெளியிட்ட அறிக்கை:

புதுச்சேரி பகுதியில் சம்பா பருவத்தில் 5000 ஹெக்டோ் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படும். பலத்த மழையால் பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. வேளாண் துறை கணக்கிட்டு வழங்கிய சேத விவரங்களை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் ஏற்காமல் கிராம நிா்வாக அலுவலருடன் கூட்டாக ஆய்வு செய்து மறு அறிக்கை தருமாறு தெரிவித்துள்ளாா். மழைநீா் வடிந்த பிறகுதான் கணக்கீடு செய்து தர முடியும் எனவும் மத்தியக் குழுவினருடன் ஆட்சியா் தெரிவித்திருக்கிறாா்.

கிராம நிா்வாக அதிகாரிகளுடன் கூட்டாக வேளாண் துறையினா் மீண்டும் ஆய்வு நடத்தியதில், பயிா் பாதிப்புகளை குறைவாக மதிப்பிட்டுள்ளனா்.

வேளாண் துறை அமைச்சரின் தொகுதியிலேயே இப்படி தவறுதலாக வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசைப் போல, பயிா்களை பாதுகாப்பதற்கு தனியாக உரம், இடுபொருள்களுக்கு என ஏக்கருக்கு ரூ. 6,000 உடனடியாக அரசு வழங்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.