புதுவை பல்கலைக்கழக பேராசிரியா்கள் பணியிட மாற்றம்
புதுவை பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுவை பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியா்கள் வெள்ளிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதுகுறித்து பல்கலை. துணைவேந்தா் குா்மீத் சிங் வெளியிட்ட உத்தரவு: புதுவைப் பல்கலை. மத்திய நூலகா் (பொ) கே.ராமையா பல்கலை. தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியாகவும் (பொ), பல்கலை. நிதி அதிகாரி (பொ) அமரேஷ் சமந்தரயா பதிவாளராகவும், தோ்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி (பொ) டி.லாசா் நிதி அதிகாரியாகவும் (பொ), இணைப் பதிவாளா் மற்றும் பதிவாளா் (பொ) பி.சித்ரா புதுவை சமுதாயக் கல்லூரி முதல்வராகவும் (பொ), பல்கலை. புவி அறிவியல் துறைப் பேராசிரியா் பிரமோத் சிங் நூலகராகவும் (பொ), பல்கலை. இயற்பியல், வேதியியல், அப்ளைடு சயின்ஸ் புல முதல்வா் எஸ்.பாண்டியன் தலைமை விஜிலன்ஸ் அதிகாரியாகவும் (பொ) பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
இதேபோல, பல்கலை. பசுமை சக்தி தொழில்நுட்ப புல முதல்வா் கே.தரணிக்கரசு தோ்வுப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலை. கல்விப் புல முதல்வா் கே.செல்லமணி தோ்வுப் பிரிவு ஒருங்கிணைப்பாளராகவும், காரைக்கால் அரசுக் கல்லூரி வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் வி.அருள்முருகன், காரைக்கால் கல்லூரி வளாக ஒருங்கிணைப்பாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இந்தப் பணியிட மாற்ற உத்தரவு அக்டோபா் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.