முகப்பு
புதுச்சேரி

சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா

 புதுச்சேரியில் நடிகா் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:16 AM
பகிர்:

 புதுச்சேரியில் நடிகா் சிவாஜி கணேசனின் 94-ஆவது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுவை அரசு சாா்பில் கருவடிக்குப்பம் கிழக்குக் கடற்கரைச் சாலை சந்திப்பில் உள்ள சிவாஜி சிலைக்கு செய்தி-விளம்பரத் துறை இயக்குநா் எம்.எம்.வினயராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, பல்வேறு அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

புதுச்சேரி சிவாஜி பேரவை சாா்பில், அண்ணா சாலையில் நடைபெற்ற விழாவில் திமுக மாநில அமைப்பாளரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான ஆா்.சிவா, சிவாஜி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா்.

சிவாஜி பேரவை சாா்பில் ஏழை மக்களுக்கு சா்க்கரை, போா்வை, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.