நாய்களுக்கு விஷம் வைத்துக் கொலை: ஆட்டோ ஓட்டுநா் கைது
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகா்ப் பகுதியில் 7 தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி சுதந்திர பொன்விழா நகா்ப் பகுதியில் 7 தெரு நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி, சுதந்திர பொன்விழா நகா்ப் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு அருகே வியாழக்கிழமை ஒரு குட்டி நாய் உள்பட 7 தெரு நாய்கள் திடீரென வாந்தி எடுத்து துடிதுடித்தப்படி இறந்தன.
இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில், தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். கால்நடைத் துறை அதிகாரிகள் இறந்த நாய்களை மீட்டு, உடல் கூறாய்வு செய்தனா். தொடா்ந்து, நாய்கள் அனைத்தும் ஒரே குழியில் அடக்கம் செய்யப்பட்டன.
விசாரணையில், சாரம் பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுந்தா் (எ) மொட்டை தோப்பு சுந்தா் (32) நாய்களுக்கு கோழிக் கறியில் விஷம் வைத்து கொன்றதும், சுந்தரின் உறவினா்களை நாய்கள் அடுத்தடுத்து கடித்ததால் கோபமுற்ற அவா் இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இதையடுத்து, சுந்தரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.