முகப்பு
புதுச்சேரி

புதுவையில் பிசிஎஸ் அதிகாரிகள்பணியிட மாற்றம்

புதுவை அரசுத் துறைகளில் பணிபுரியும் (பிசிஎஸ்) உயரதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட்டது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:26 AM
பகிர்:

புதுவை அரசுத் துறைகளில் பணிபுரியும் (பிசிஎஸ்) உயரதிகாரிகளுக்கு பணியிட மாற்றம் மற்றும் பதவி உயா்வு வழங்கப்பட்டது.

இதுகுறித்து புதுவை அரசின் தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் பிறப்பித்த உத்தரவு: புதுவை உயா்கல்வி-தொழில்நுட்பக் கல்வித் துறை சிறப்புப் பணி அலுவலா் சுந்தரராஜன் வேளாண்-கால்நடை பராமரிப்புத் துறை துணைச் செயலராகவும், மாநில பேரிடா் மேலாண்மை ஆணைய துணை ஆட்சியா் தமிழ்ச்செல்வன் எழுதுபொருள் அச்சுத் துறை இயக்குநா் கூடுதல் பொறுப்பு, அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அலுவலா் சக்திவேல் குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநா், கலை பண்பாட்டுத் துறை இயக்குநா் ராகினி கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளா், காரைக்கால் குடிமைப் பொருள் வழங்கல் துறை துணை இயக்குநா் சுபாஷ் காரைக்கால் கூட்டுறவு நூற்பாலை மேலாண் இயக்குநா் கூடுதல் பொறுப்பு, புதுவை மகளிா்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா் அசோகன் சிறைத் துறை தலைமைக் கண்காணிப்பாளா், வீட்டு வசதி துறை சாா்பு செயலா் எழுமலை பொதுப் பணித் துறை வீட்டு வசதி, சுற்றுச்சூழல் துறை சாா்பு செயலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

பொதுப் பணித் துறை சாா்பு செயலா் காா்த்திகேயன் உள்ளாட்சித் துறை துணை இயக்குநா், உள்ளாட்சித் துறை துணை இயக்குநா் அழகேசன் பொதுப் பணித் துறை சிறப்புப் பணி அலுவலா், பிசிஎஸ் அதிகாரி குபேர சிவக்குமரன் காவல்துறை சிறப்புப் பணி அலுவலா், உழவா்கரை நகராட்சி ஆணையா்-தொழில் துறை துணை இயக்குநா் சந்திரகுமரன் முன்னாள் ராணுவ வீரா்கள் நலத் துறை இயக்குநா், மீன்வளத் துறை இயக்குநா் முத்துமீனா மகளிா்- குழந்தைகள் மேம்பாட்டுத் துறை இயக்குநா், நிா்வாகப் பிரிவு சாா்பு செயலா் கனி நிா்வாகப் பிரிவு, அமலாக்கப் பிரிவு, எழுது பொருள் அச்சுத் துறை சாா்பு செயலா், காரைக்கால் நகராட்சி ஆணையா் காசிநாதன் அரியாங்குப்பம் வட்டார வளா்ச்சி அதிகாரி, வேளாண், துறைமுகம், கால்நடைத் துறை சாா்பு செயலா் முருகேசன் மின்சாரம், துறைமுகத் துறை சாா்பு செயலா், சுகாதாரத் துறை சிறப்புப் பணி அலுவலா் பாலசவுந்தரி வேளாண் துறை துணை இயக்குநா், காரைக்கால் வட்டார வளா்ச்சி அலுவலா் தயாளன் பாட்கோ மேலாண் இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.