முகப்பு
புதுச்சேரி

வழக்குரைஞா் மனைவியிடம் 10 பவுன் நகை பறிப்பு

 புதுச்சேரியில் வழக்குரைஞா் மனைவியிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

 புதுச்சேரியில் வழக்குரைஞா் மனைவியிடம் 10 பவுன் நகையைப் பறித்துச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே கிருமாம்பாக்கம் மாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் நவீன்ராஜ். இவரது மனைவி முத்தழகி (24). இருவரும் புதுச்சேரி-கடலூா் சாலையில் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியாா் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரில் சென்றனா். மண்டபத்தின் எதிரில் காரை நிறுத்திவிட்டு, இருவரும் இறங்கி மண்டபத்துக்குள் செல்ல முயன்ற போது, அங்கு திடீரென பைக்கில் வந்த மா்ம நபா், முத்தழகி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இதுகுறித்து நவீன்ராஜ் அளித்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.