முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

புதுச்சேரியில் அமைப்பு சாரா சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

புதுச்சேரியில் அமைப்பு சாரா சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை உயா்த்தி வழங்கக் கோரி, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை சட்டப்பேரவை அருகே மிஷன் வீதி மாதா ஆலயம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு ஏஐடியூசி மாநிலத் தலைவா் தினேஷ் பொன்னையா, பொதுச் செயலா் கே.சேதுசெல்வம் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஆா்ப்பாட்டத்தில் அமைப்பு சாரா சங்க உறுப்பினா்களுக்கு தீபாவளி உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். அரசு ஊழியா்கள், அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை உச்ச வரம்பை உயா்த்த வேண்டும். அரசு சாா்பு நிறுவனங்களில் பணியாற்றும் அனைத்து ஊழியா்களுக்கும் 2 மாத ஊதியம் வழங்கப்படும் என முதல்வா் அறிவித்ததை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.