முகப்பு
புதுச்சேரி

பாரதிதாசன் மகளிா் கல்லூரியில் இன்று முதல் கலந்தாய்வு தொடக்கம்

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.26) தொடங்கி நவம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:27 AM
பகிர்:

புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் முதல் கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.26) தொடங்கி நவம்பா் 8-ஆம் தேதி வரை நடைபெறகிறது.

இதுதொடா்பாக அந்தக் கல்லூரி முதல்வா் ராஜி சுகுமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி கணினி அறிவியல் துறை டிஜிட்டல் ஆய்வகத்தில் முதல்கட்ட கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (அக்.26) தொடங்கி நவ.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பி.காம் (பொது), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பி.ஏ., (ஆங்கிலம்), அக்.27 காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பி.காம் (நிறுவன செயலா்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பி.ஏ. (தமிழ்), அக்.28 காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பி.ஏ., (பொருளாதாரம்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பி.ஏ., (பிரெஞ்ச், வரலாறு), பி.எஸ்சி. (கணிதம்), அக் 29 காலை 10 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பி.எஸ்சி. (இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல்), பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பி.எஸ்சி. (தாவரவியல், விலங்கியல், சிஎன்டி) ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.

நவ. 2, 6, 8 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அனைத்துப் பாடப் பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். அக்.30, 31, நவ.1, 3, 4, 5, 7 ஆகிய தேதிகளில் கலந்தாய்வு நடைபெறாது என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.