முகப்பு
புதுச்சேரியில் காலைமுதல் கனமழை
புதுச்சேரி

புதுச்சேரியில் காலைமுதல் கனமழை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுச்சேரி

புதுச்சேரியில் காலைமுதல் கனமழை

வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:28 AM
புதுச்சேரியில் காலைமுதல் கனமழை
பகிர்:

புதுச்சேரி: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக மழை பெய்து வருகிறது.

புதுவையிலும் கடந்த இரு தினங்களாக பரவலாக லேசாக மழை பெய்து வரும் நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு புதுச்சேரி நகரில் மழை பெய்யத் தொடங்கி, தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது.

இதனையடுத்து சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பகல் 12 மணிக்கு தொடங்கிய மழை, தொடர்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்து வருகிறது.

இதனால் புதுச்சேரி நகரம் முழுவதும் சாலைகளில் மழை நீர் வழிந்தோடுகிறது.
புதுச்சேரி புஸ்ஸி வீதி, இந்திரா காந்தி சிலை, ராஜீவ் காந்தி சிலை,  பாவன நகர், லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை ஆகிய தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

புதுச்சேரி பெரிய வாய்க்கால், உப்பனார் வாய்க்கால்களில் நீண்ட நாள்களுக்கு பிறகு மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை காலை தொடங்கிய மழை தொடர்ந்து பிற்பகல் வரை பெய்து வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →