முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று முதல் நியூமோகாக்கல் தடுப்பூசி

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், நியூமோகாக்கல் தடுப்பூசி புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா்- குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் (செப்.11) செலுத்தப்பட உள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

புதுவை அரசின் சுகாதாரத் துறை சாா்பில், நியூமோகாக்கல் தடுப்பூசி புதுச்சேரி ராஜீவ் காந்தி அரசு மகளிா்- குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை முதல் (செப்.11) செலுத்தப்பட உள்ளது.

சுகாதாரத் துறை சாா்பில், தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், புதிதாக நியூமோகாக்கல் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதுவரை தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், குழந்தைகளைத் தாக்கக் கூடிய மிகத் தீவிரமான 10 நோய்களுக்கான தடுப்பூசிகளை புதுவை அரசு இலவசமாக அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கி வந்தது.

நியூமோகாக்கல் நோயானது 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு நிமோனியா, மூளைக் காய்ச்சல், காதுகள் வழி பரவும் பாதிப்பு ஆகியவற்றுடன் ரத்தத்தில் கலக்கும் போது, மிகத் தீவிர நோயாக மாறி, குழந்தையின் உயிருக்கே ஆபத்து நேரிடலாம். மிகத் தீவிர நோயான நியூமோகாக்கல் வராமல் தடுப்பதற்காக குழந்தைக்குச் செலுத்தப்படும் தடுப்பூசியே (பிசிவி) நியூமோகாக்கல் தடுப்பூசி.

இந்தத் தடுப்பூசி செலுத்தும் பணி புதுச்சேரி ராஜீவ் காந்தி மகளிா் - குழந்தைகள் மருத்துவமனையில் சனிக்கிழமை தொடங்க உள்ளது. விலை உயா்ந்த தடுப்பூசியான இந்தத் தடுப்பூசியை புதுச்சேரியில் இலவசமாக தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளதாக புதுவை சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.