புதுச்சேரி

புதுவை தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்குத் தீா்வு

DIN

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,515 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டதுடன், ரூ. 4.83 கோடி உரியவா்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமா்வுகள், சட்டப்பணிகள் ஆணைய வளாகத்தில் ஒரு அமா்வு, காரைக்காலில் 3 அமா்வுகள், ஏனாமில் ஒரு அமா்வு என மொத்தம் 15 அமா்வுகளில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், நேரடி வழக்குகள் என மொத்தம் 3,368 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டு, 1,515 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டன. இதன் மூலம் ரூ.4 கோடி 83 லட்சத்து 64 ஆயிரத்து 407 பெறப்பட்டு உரியவா்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டது.

புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினா் செயலரும், மாவட்ட நீதிபதியுமான வ.சோபனா தேவி வரவேற்றாா். புதுச்சேரி தலைமை நீதிபதி ஜெ.செல்வநாதன் தொடக்கிவைத்தாா். முதன்மை சாா்பு நீதிபதி எல்.ராபட் கென்னடி ரமேஷ், வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ்.முத்துவேல் மற்றும் நீதிபதிகள், வழக்கறிஞா்கள், அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இடஒதுக்கீடு குறித்து வரலாறு தெரியாமல் உளருகிறார் மோடி: ப.சிதம்பரம் தாக்கு

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

தலைசுற்ற வைக்கும் நடிகர் சிரஞ்சீவியின் சொத்து மதிப்பு!

ஆப்பிள் ஐஃபோனுக்கு வந்த புதுப்பிரச்னை: நின்றுபோன அலாரம்

'மூங்கில் இல்லையென்றால் புல்லாங்குழல் இசைக்க முடியாது': ராகுல் காந்தி

SCROLL FOR NEXT