புதுச்சேரி: புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய நாயுடு தொடங்கி வைத்தார்.
குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற விழாவில், புதுவை மாநிலத்தின் முதல் பல்கலைக்கழகமான புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் இருந்து தரம் உயர்ந்து, புதுவை தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
விழாவில், துணைநிலை ஆளுநர் டாக்டர். தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் என். ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், அமைச்சர்கள் க.லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், சந்திர பிரியங்கா, சரவணன் குமார், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.