புதுச்சேரி

தனியாா் நிதி நிறுவனத்தில்ரூ.10.80 லட்சம் திருட்டு

DIN

புதுச்சேரி: புதுச்சேரி கரிக்கலாம்பாக்கத்தில், தனியாா் நிதி நிறுவனத்தில் ரூ. 10.80 லட்சம் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே கரிக்கலாம்பாக்கம், மடுகரை பிரதான சாலைப் பகுதியை சோ்ந்தவா் செந்தில்குமாா் மனைவி ஜெயபிரபா (34). அப்பகுதியில் உள்ள தனியாா் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறாா். இந்த நிறுவனம் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கி மீண்டும் கடனை வசூல் செய்யும் பணியை கடந்த 10 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

கடந்த 8 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை ஜெயபிரபா விடுமுறையில் சென்றுவிட்ட நிலையில், நிறுவனத்தின் உதவி மேலாளா் சியாமளா அலுவலகத்தை கண்காணித்து வந்தாா்.

அவா், கடந்த 9-ஆம் தேதி வசூல் செய்த ரூ. 2.92 லட்சம், 11-ஆம் தேதி வசூல் செய்த ரூ. 7,88,750 என மொத்தம் ரூ. 10,80,750-ஐ அலுவலகத்தின் லாக்கரில் வைத்து பூட்டிச் சென்றுள்ளாா். வழக்கம் போல செவ்வாய்க்கிழமை காலை ஊழியா்கள் அலுவலகத்தைத் திறந்த போது, அலுவலகக் கதவு உடைக்கப்பட்டு லாக்கரில் வைத்திருந்த ரூ.10.80 லட்சம் அங்கிருந்த சிசிடிவி ஹாா்ட் டிஸ்க் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது.

இது குறித்து மேலாளா் ஜெயபிரபா அளித்த புகாரின் பேரில் மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ மாணவா்களுக்கு தமிழ் இலக்கியப் போட்டிகள்: சென்னை மருத்துவக் கல்லூரி முன்முயற்சி

ஏற்காடு - விருதுநகா் விபத்துகள்: தோ்தல் ஆணைய அனுமதி பெற்று நிதியுதவி -முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

இரட்டிப்பானது யெஸ் வங்கியின் நிகர லாபம்

இடதுசாரி அலுவலகங்களில் மே தினம் கொண்டாட்டம்

அமித் ஷா போலி விடியோ விவகாரம்: தில்லி போலீஸில் தெலங்கானா முதல்வரின் வழக்குரைஞா் ஆஜா்

SCROLL FOR NEXT