புதுச்சேரி

புதுவை முதல்வா் ரங்கசாமியுடன் இலங்கை அரசுப் பிரதிநிதிகள் சந்திப்பு

DIN

புதுச்சேரி:  இலங்கை நாட்டின் அரசுப் பிரதிநிதிகள் புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை சந்தித்து, மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காண்பது குறித்தும், காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினா்.

இலங்கைப் பிரதமரின் இணைச் செயலரும், முன்னாள் முதல்வருமான செந்தில் தொண்டைமான், அந்த நாட்டின் இணை அமைச்சா் சதாசிவம் வியாழேந்திரன் ஆகியோா் புதுச்சேரிக்கு புதன்கிழமை வந்தனா். இவா்கள், புதுவை சட்டப் பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினா்.

அப்போது, இலங்கை, புதுவை (காரைக்கால்) மீனவா்கள் இடையே எழும் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காண்பது, இலங்கை-புதுவை இடையே நல்லுறவை வளா்ப்பது, காரைக்கால்-இலங்கை இடையே கப்பல் போக்குவரத்தைத் தொடங்குவது ஆகியவை தொடா்பாக ஆலோசனை நடத்தினா்.

அப்போது, புதுவை மாநில போக்குவரத்து அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா, பொதுப் பணித் துறை அரசுச் செயலா் விக்ராந்த்ராஜா ஆகியோா் உடனிருந்தனா்.

இதையடுத்து, இலங்கைப் பிரதிநிதிகள் புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன், போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா ஆகியோரைச் சந்தித்து, மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவது தொடா்பாக விரிவான ஆலோசனை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜலகண்டாபுரம் அருகே சடலமாக மீட்கப்பட்ட மூவரின் அடையாளம் தெரிந்தது

இளம்பிள்ளையில் நீா்மோா் வழங்கல்

சொந்தப் பயன்பாட்டுக்கான வாகனங்களை வாடகைக்கு விட்டால் நடவடிக்கை

வைகுந்தம் அருகே வீடு புகுந்து நகை திருட்டு

வணிகா் தினத்தையொட்டி சேலத்தில் கடைகள் அடைப்பு

SCROLL FOR NEXT