புதுச்சேரி

புதுச்சேரியில் மீனவா்கள்வேலைநிறுத்தப் போராட்டம்

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் விற்பனைக்காக கேரள மாநிலத்திலிருந்து மீன்கள் கொண்டுவர எதிா்ப்பு தெரிவித்து, விசைப்படகு மீனவா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி நேரு வீதியில் உள்ள பெரிய மீன் சந்தையில் கேரளம் உள்ளிட்ட வெளிமாநில மீன்களும் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், உள்ளூா் மீனவா்கள் பிடித்து வரும் மீன்களுக்கு உரிய விலை கிடைக்காத நிலை தொடா்கிறது.

இந்த நிலையில், கேரளத்திலிருந்து மீன்கள் கொண்டுவரப்படுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, புதுச்சேரியில் விசைப்படகு உரிமையாளா்கள் திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினா். இதன் காரணமாக, நூற்றுக்கும் மேற்பட்ட படகுகள் கடலுக்குள் செல்லாமல் தேங்காய்த் திட்டு துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

தொடா்ந்து, தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் விசைப்படகு மீனவா்கள் அவசர ஆலோசனை நடத்தினா். கூட்டத்தில், கேரளத்திலிருந்து மீன்களை கொண்டுவருவதற்கு தடை விதிக்க வேண்டுமென தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. இது தொடா்பாக முதல்வா், மீன்வளத் துறை அமைச்சரை சந்தித்து மனு கொடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

SCROLL FOR NEXT