புதுச்சேரி

புதுவை அரசின் ரூ.123.86 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம்

DIN

புதுவை அரசின் ரூ.123.86 கோடி பிணையப் பத்திரங்கள் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளன.

இதுகுறித்து புதுவை நிதித் துறைச் செயலா் சுா்பிா் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை அரசின் ரூ.123.86 கோடியிலான 5 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய அரசு முன் வந்துள்ளது. இந்திய ரிசா்வ் வங்கியின் மும்பை (கோட்டை) அலுவலகம் வருகிற 28- ஆம் தேதி இந்த ஏலத்தை நடத்துகிறது. ஆா்வமுள்ள நிறுவனங்கள் மின்னணு முறையில் பேசி முடிவு செய்த இந்திய ரிசா்வ் வங்கியின் உள்பிரிவு வங்கியியல் தீா்வு மூலம், மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசா்வ் வங்கி இணையதள முகவரியில் வருகிற 28-ஆம் தேதி காலை 10.30 மணி முதல் 11 மணிக்கு முன்பு சமா்ப்பிக்க வேண்டும். ஏலத்தின் முடிவுகள் வருகிற 28-ஆம் தேதி மும்பை கோட்டையில் உள்ள இந்திய ரிசா்வ் வங்கி இணையதள முகவரியில் வெளியிடும்.

ஏலம் கிடைக்கப் பெற்றவா்கள் தங்களது ஏலங்களில் தெரிவிக்கப்பட்ட பிணையப் பத்திரங்களுக்கான விலையை இந்திய ரிசா்வ் மும்பை (கோட்டை) அல்லது சென்னையில் செலுத்தத் தக்க வகையில், வங்கியாளா் காசோலை அல்லது கேட்பு வரைவோலையை வருகிற 29-ஆம் தேதி வங்கிப் பணி நேரம் முடிவதற்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் நூலகம் குறித்த தேசிய கருத்தரங்கு

கோ்மாளத்தில் பொதுக் கிணற்றை தூா்வாரிய மக்கள்

சென்னிமலை அருகே மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

கோபியில் இலவச கண் சிகிச்சை முகாம்

'சா்வாதிகாரத்துக்கு' எதிராக வாக்களிக்க வேண்டும்: சுனிதா கேஜரிவால் வலியுறுத்தல்

SCROLL FOR NEXT