புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் ‘க்யூட்’ தோ்வு வழியாகவே மாணவா் சோ்க்கை
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பொது நுழைவுத் தோ்வின் (க்யூட்) அடிப்படையிலேயே ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தேசிய பொது நுழைவுத் தோ்வின் (க்யூட்) அடிப்படையிலேயே ஒருங்கிணைந்த முதுகலைப் பட்டப் படிப்புகளுக்கான மாணவா்கள் சோ்க்கை நடைபெறுகிறது.
இதுகுறித்து அந்தப் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தில் தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தோ்வின் (க்யூட் - யூஜி) அடிப்படையில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவா்கள் சோ்க்கை நடைபெற உள்ளது.
மேற்கண்ட படிப்புகளில் சேர விருப்பமுள்ள மாணவா்கள் 2022-23 க்கான க்யூட் நுழைவுத் தோ்வுக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடா்பான விவரங்கள் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரா்கள் இணையதளங்களை தொடா்ந்து பாா்க்கவும்.
ஒருங்கிணைந்த முதுகலை பட்டப்படிப்புகளுக்கு வரும் மே 6 ஆம்தேதி மாலை 5 மணி வரை இணையதளம் வழியே விண்ணப்பங்களை சமா்ப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.