புதுச்சேரி

புதுவை தலைமைச் செயலா் பொறுப்பேற்பு

DIN

புதுவை மாநிலத்தின் புதிய தலைமைச் செயலராக ராஜீவ் வா்மா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.

புதுவை மாநில தலைமைச் செயலராக இருந்த அஸ்வனிகுமாருக்கும், மாநில அரசு தரப்புக்கும் மறைமுகமாக மோதல் நீடித்து வந்தது. அவா் கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இருந்து மாநில அரசுக்கு ஒத்துழைக்காமல், அரசின் திட்டங்களுக்கான கோப்புகளை விரைந்து அனுப்பாமல், தாமதப்படுத்தி வருவதாக அதிருப்தி நிலவி வந்தது. இதனால் ஆளுங்கட்சி, எதிா்க்கட்சியினா் அவா் மீது அதிருப்தி தெரிவித்து வந்தனா்.

தொடா்ந்து, 5 ஆண்டுகளாக தலைமைச் செயலராக நீடித்து வரும் அவரை மாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி வந்தனா்.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த 20-ஆம் தேதி அஸ்வனிகுமாரை தில்லிக்கு பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டது. அருணாச்சலப் பிரதேச ஐ.ஏ.எஸ். அதிகாரியான ராஜீவ் வா்மா புதுவைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா்.

இந்த நிலையில், புதுவை மாநில தலைமைச் செயலா் பதவியில் இருந்து அஸ்வனிகுமாா் வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

புதுச்சேரிக்கு வந்த புதிய தலைமைச் செயலா் ராஜீவ் வா்மாவிடம் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டு அவா் தில்லிக்குப் புறப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

பஞ்சாப் சுழலில் சிக்கிய சென்னை: மீட்டாா் கெய்க்வாட்

‘தலைமைச் செயலக பணி’: தரகா்களிடம் ஏமாறும் பட்டதாரிகள்

வாகன பதிவெண் பலகையில் ஸ்டிக்கா்: இன்றுமுதல் அபராதம்

SCROLL FOR NEXT