புதுச்சேரி

காரைக்காலில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும்: புதுவை முதல்வர்

காரைக்கால் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று புதுச்சேரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

DIN

புதுச்சேரி: காரைக்கால் பகுதியில் புதிய மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என்று புதுச்சேரி ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

காரைக்கால் பகுதியில் புற நோயாளிகள் பிரிவு அமைக்கப்பட உள்ளது. மேலும், எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியாக வழங்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் 2022 - 23 ஆம் நிதி ஆண்டிற்காக ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். 

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 ஆம் தேதி துணை ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் மத்திய அரசு, பட்ஜெட்டிற்கு அனுமதி அளிக்காததால் அன்றைய தினமே பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மத்திய அரசு பட்ஜெட்டிற்கு ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று(திங்கள்கிழமை) மீண்டும் தொடங்கியது. 

காலை 9.45 மணிக்கு பேரவை கூடியதும், 2022 - 2023 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696.61 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, துறை வாரியாக நிதி ஒதுக்கீடு மற்றும் திட்டங்கள் குறித்து  உரையாற்றினார்.

வருகிற 30-ந்தேதி வரை இந்த பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொழில் கடன் பெறுவதற்கு பெண்கள் விண்ணப்பிக்கலாம்

பழனி தைப்பூசத் திருவிழா: 892 இடங்களில் கண்காணிப்பு கேமரா

கச்சத்தீவு புனித அந்தோணியாா் ஆலய திருவிழா பிப். 27- இல் தொடக்கம்

மரம் முறிந்து விழுந்து ஆயுதப்படை மைதான சுற்றுச் சுவா் சேதம்

தனியாா் பள்ளியில் கட்டண உயா்வு: பெற்றோா்கள் முற்றுகை

SCROLL FOR NEXT