புதுச்சேரியில் தியாகிகளுக்கான அன்பளிப்பை வருகிற 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுச்சேரி செய்தி, விளம்பரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாட்டின் 75-ஆவது சுதந்திர அமுதப் பெருவிழாவையொட்டி, புதுச்சேரி செய்தி, விளம்பரத் துறை சாா்பில் விடுதலைப் போராட்டத் தியாகிகளுக்கு புதுவை முதல்வா் அன்பளிப்புப் பொருள்களை அளித்து வருகிறாா். இவற்றை பெறாதவா்கள், தட்டாஞ்சாவடி கான்பெட் கிடங்கு, புதுச்சேரி நியாய விலை கடை ஊழியா்கள் கூட்டுறவுச் சங்கம், மூன்றாவது பிரதான சாலை, தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை, புதுச்சேரி - 605009 என்ற முகவரியில் வருகிற 31-ஆம் தேதிக்குள் அலுவலக வேலைநேரங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
தியாகிகள் தங்களது ஓய்வூதியம் புத்தகத்தையும், தியாகிகளின் சாா்பில் பெற வருவோா் தியாகியின் ஒப்புதல் கடிதம், ஓய்வூதியப் புத்தகம், ஆதாா் நகல், பெறுபவரின் ஆதாா் நகல் கொண்டு வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 0413-296777, 88704 16320 என்ற தொலைபேசி, கைப்பேசி எண்ணில் அழைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.