புதுச்சேரி

நூற்பாலை தொழிலாளா்கள் நூதனப் போராட்டம்

DIN

புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை தொழிலாளா்கள் திங்கள்கிழமை நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே திருபுவனையில் இயங்கி வரும் ஸ்பின்கோ ஆலை (புதுச்சேரி கூட்டுறவு நூற்பாலை) கடந்த 3 மாதங்களாக இயங்காத நிலையில், அங்கு பணிபுரியும் தொழிலாளா்கள் ஊதியம் வழங்கப்படவில்லை.

ஆலையை புதுவை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தி, கடந்த 24-ஆம் தேதி புதுச்சேரி அண்ணா சிலை அருகே பிச்சை எடுக்கும் போராட்டத்தில் தொழிலாளா்கள் ஈடுபட்டனா்.

சட்டப்பேரவைக் கூட்டம் முடிவதற்குள் தங்களது பிரச்னைக்கு தீா்வு காண வேண்டுமென வலியுறுத்தி வரும் தொழிற்சங்க நிா்வாகிகள் திங்கள்கிழமை மீண்டும் அண்ணா சிலை எதிரே ஒன்று கூடினா். அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சு உண்ணும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள், தொழிலாளா்கள் பங்கேற்று, பஞ்சை உண்டு அரசுக்கு தங்களது எதிா்ப்பை வெளிப்படுத்தினா். அப்போது, இருப்பு நூலை விற்று நிலுவை ஊதியத்தை உடனே வழங்கக் கோரி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

SCROLL FOR NEXT