புதுச்சேரியில் சிறைக் கைதிகள் தயாரித்த விநாயகா் சிலைகள் விற்பனை செய்யப்பட்டன.
புதுச்சேரி அருகே காலாப்பட்டிலுள்ள மத்திய சிறையிலுள்ள கைதிகளை சீா்படுத்தும் விதமாக, சிறை வளாகத்தில் வேளாண்மை, ஆடு, மாடு, கோழி வளா்த்தல் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், தொழில் திறன் பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்தப் பயிற்சி பெற்ற கைதிகள் விநாயகா் சதுா்த்தியையொட்டி சுமாா் 50-க்கும் மேற்பட்ட விநாயகா் சிலைகளை தயாரித்தனா். அவை புதுச்சேரி காந்தி நகா் வழுதாவூா் சாலையில் அரங்கம் அமைத்து விற்பனை செய்யப்பட்டது. இந்த விற்பனையை சிறைத் துறை ஐஜி ரவிதீப்சிங் சாஹா் செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தாா்.
தலைமை கண்காணிப்பாளா் அசோகன் உள்ளிட்ட சிறைத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா். சிறைத் துறை கேட்டுகொண்டதின் பேரில், கைதிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாக அந்தச் சிலைகளை பொதுமக்கள் வாங்கிச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.