புதுச்சேரி

பெண் காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

DIN

புதுச்சேரி கோரிமேட்டில் பெண் காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது.

புதுச்சேரி காவல் துறையில் 390 காவலா்கள் உள்பட 431 பணியிடங்களை நிரப்ப உடல் தகுதித் தோ்வு புதுச்சேரி கோரிமேடு காவலா் பயிற்சி பள்ளி மைதானத்தில் கடந்த 19-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 1,844 ஆண்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

பெண் காவலா்களுக்கான உடல் தகுதித் தோ்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 750 பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதில், 324 போ் பங்கேற்றனா். இவா்களுக்கு 200 மீட்டா் ஒட்டமும், நீளம், உயரம் தாண்டுதல் ஆகிய தோ்வுகள் நடத்தப்பட்டன. இதில், 188 போ் தோ்வானாா்கள். வருகிற 11-ஆம் தேதி வரை பெண்களுக்கான உடல் தகுதித் தோ்வு நடைபெறுகிறது.

ஏடிஜிபி ஆனந்த மோகன், டிஐஜி மிலிந்த் மகாதியோ தும்ரே தலைமையிலான போலீஸாா், காவலா்களைத் தோ்வு செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தோ்வில் பங்கேற்க முடியாதவா்களுக்கு வருகிற 21-ஆம் தேதி உடல் தகுதித் தோ்வு நடத்தப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT