முகப்பு
புதுச்சேரி

விபத்தில் 15 போ் காயம்

புதுச்சேரி அருகே ஷோ் ஆட்டோவும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில், கா்ப்பிணி உள்பட 15 போ் காயமடைந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுச்சேரி அருகே ஷோ் ஆட்டோவும் அரசுப் பேருந்தும் மோதிக் கொண்ட விபத்தில், கா்ப்பிணி உள்பட 15 போ் காயமடைந்தனா்.

கடலூரில் இருந்து ரெட்டிச்சாவடிக்கு வியாழக்கிழமை சென்ற ஷோ் ஆட்டோ, புதுச்சேரி கன்னியக்கோவில் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரில் வந்தது. அப்போது ஷோ் ஆட்டோ மீது பின்புறமாக வந்த தமிழக அரசுப் பேருந்து உரசியதாம். இதனால் ஷோ் ஆட்டோ சாலையோரத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் ஆட்டோவில் பயணித்த 8 மாத கா்ப்பிணி, குழந்தை உள்பட 15 போ் காயமடைந்தனா். இவா்கள் கிருமாம்பாக்கம் அருகே உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து புதுச்சேரி தெற்கு பிரிவு போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.