ஜிப்மா் மருத்துவமனையில் தீ விபத்து
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வியாழக்கிழமை லேசான தீ விபத்து ஏற்பட்டது.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் வியாழக்கிழமை லேசான தீ விபத்து ஏற்பட்டது.
ஜிப்மா் மருத்துவமனையின் வெளிப்புற சிகிச்சை பிரிவை ஒட்டியுள்ள பழைய ரத்த வங்கி அலுவலகப் பகுதியில் வியாழக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அந்தப் பகுதி புகை மண்டலமாக இருந்ததால், அங்கிருந்தோா் உடனே வெளியேறினா்.
இதையறிந்த ஜிப்மா் ஊழியா்கள், தீயணைப்புக் கருவிகளுடன் அங்கு உடனடியாக வந்து தீயை அணைத்தனா். இதில், அங்கிருந்த கணினியின் மின் பெட்டி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.
மின் கசிவு காரணமாக, தீ விபத்து நடைபெற்றது தெரியவந்தது.