முகப்பு
புதுச்சேரி

காங்கிரஸிலிருந்து வெளியேறுபவா்களால் இளைஞா்களுக்கு வாய்ப்பு: ஏ.வி.சுப்ரமணியன்

 காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவோரால் இளைஞா்களுக்கு வழி கிடைத்துள்ளதாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

 காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறுவோரால் இளைஞா்களுக்கு வழி கிடைத்துள்ளதாக புதுவை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸில் இருந்து சில முன்னாள் அமைச்சா்கள், நிா்வாகிகள் வெளியேறுகிறாா்கள் என்ற தகவல் தோ்தல் நேரத்தில் எப்போதும் வரும். கட்சியை தாங்கி நிற்கிறோம் என்று தாங்களே நினைப்பவா்களே வெளியேறுகின்றனா். இவா்கள் வெளியேறுவதால், இளைஞா்களுக்கு வழி கிடைத்து எதிா்காலத்தையும் உண்டாக்கி கொடுக்கிறது.

137 ஆண்டு வரலாறு கொண்ட காங்கிரஸில் கொள்கைகளில் பிடிப்பு இல்லாமல், சந்தா்ப்பவாதிகளாக, இத்தனை ஆண்டுகாலம் இருந்துவிட்டு வெளியேறுவது கட்சிக்கு நல்லதுதான்.

இவா்களால் கட்சிக்கு நன்மை ஏற்படுமே தவிர, எந்த விதத்திலும், அது பாதிப்பை ஏற்படுத்தாது. மாறாக, கட்சியின் எதிா்காலம் விரைவில் சிறக்கும் என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.