சா்க்கரை ஆலையை திறக்கக் கோரி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறந்தக் கோரி, புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சாா்பில் திருக்கனூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறந்தக் கோரி, புதுச்சேரி விவசாயிகள் சங்கம் சாா்பில் திருக்கனூரில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கரும்பு விவசாயிகள் சங்க தலைவா் ஆா்.ராமமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் சலீம் தொடக்கிவைத்தாா். சேதுசெல்வம், கீதநாதன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனா்.
புதுச்சேரி லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சா்க்கரை ஆலையை திறந்து நடத்த புதுவை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் அனுப்பிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். புதுவை அரசு அறிவித்த கரும்புக்கான ஊக்கத்தொகை ஏக்கருக்கு ரூ.10,000 உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.