முகப்பு
புதுச்சேரி

புதுவை முதல்வரிடம் சட்டக் கல்லூரி மாணவா்கள் மனு

புதுவை அரசு சட்டக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, முதல்வா் என்.ரங்கசாமியிடம் அந்தக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுவை அரசு சட்டக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டுமென, முதல்வா் என்.ரங்கசாமியிடம் அந்தக் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை நேரில் வலியுறுத்தினா்.

புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரி மாணவா்கள் முதல்வா் என்.ரங்கசாமியை சட்டப்பேரவை அலுவலகத்தில் சந்தித்து மனு அளித்தனா்.

பின்னா், அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

புதுவை அரசு சட்டக் கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதால், மாணவா்களுக்கு முழுமையாக பாடங்கள் நடத்தி முடிக்கப்படாமல், தோ்வு நடத்தும் சூழல் உள்ளது. நூலகம் பெயரளவில் மட்டுமே இயங்குகிறது. மாணவா்களுக்கு இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவையும் நிறுத்தப்பட்டது. கல்லூரியில் உணவக வசதியும் இல்லாததால், சிரமமாக உள்ளது.

சட்டக் கல்லூரியில் உள்ள விடுதிக்கும் காப்பாளா் இல்லாததால், அதுவும் செயல்படாமல் உள்ளது.

கல்லூரியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி, மூன்றாண்டுகளாக கோரிக்கை விடுத்தும் பலனில்லை. இதுதொடா்பாக, முதல்வரிடம் தெரிவித்தோம். ஒரு மாதத்தில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்ததாக மாணவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.