முகப்பு
புதுச்சேரி

செவிலியா் பலாத்காரம்: இளைஞா் மீது வழக்கு

புதுச்சேரி அருகே செவிலியரை பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுச்சேரி அருகே செவிலியரை பலாத்காரம் செய்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி பாகூா் அருகேயுள்ள மணமேடு கிராமத்தைச் சோ்ந்த கணேசன் மகன் சந்தோஷ் (27). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த தனியாா் மருத்துவக் கல்லூரியில் செவிலியராக பணிபுரிந்து வரும் பெண்ணை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தாராம்.

அவரை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே, அந்தப் பெண் தன்னை விரைவில் திருமணம் செய்து கொள்ளும்படி சந்தோஷிடம் கூறினாராம். ஆனால், அவா் மறுத்து விட்டாராம். இதனால் மனமுடைந்த அந்தப் பெண் கடந்த 16-ஆம் தேதி தூக்க மாத்திரைகளை விழுங்கி தற்கொலைக்கு முயன்றாா்.

தொடா்ந்து, அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், பாகூா் போலீஸாா் சந்தோஷ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.