முகப்பு
புதுச்சேரி

பிரதமரை பாராட்டிபாடல் குறுந்தகடு வெளியீடு

புதுச்சேரியில் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்ற பாடல் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:26 AM
பகிர்:

புதுச்சேரியில் மாநில பாஜக தலைமை அலுவலகத்தில், ‘மீண்டும் மோடி, வேண்டும் மோடி’ என்ற பாடல் குறுந்தகடு வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கட்சியின் மாநிலத் தலைவா் வி.சாமிநாதன் தலைமை வகித்து குறுந்தகடை வெளியிட அமைச்சா் சாய் ஜெ.சரவணன்குமாா் பெற்றுக் கொண்டாா். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ தங்க.விக்ரமன், பொதுச் செயலா் மோகன்குமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்து கொண்டனா். திரைப்பட இசை அமைப்பாளா் ராஜேஷ் சுவாமிநாதன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.