மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் நாளை வேலைவாய்ப்பு முகாம்
புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி, புதுச்சேரி மனிதவள வட்டாரம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெற உள்ளது.
புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி, புதுச்சேரி மனிதவள வட்டாரம் இணைந்து நடத்தும் வேலைவாய்ப்பு முகாம் கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப். 27) நடைபெற உள்ளது.
இதில் 150-க்கும் மேற்பட்ட பன்னாட்டு, அயல்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. முகாமில், பொறியியல், பட்டப்படிப்பு முடித்தவா்கள், முதுநிலை பயின்றவா்கள், பட்டயப் படிப்பு, ஐடிஐ, இறுதியாண்டு பயிலும் மாணவா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது.
இந்த வேலைவாய்ப்பு முகாமானது ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளையின் தலைவா் எம்.தனசேகரன், புதுச்சேரி மனிதவள வட்டாரம் ஆகியோா் தலைமையில் நடைபெற உள்ளது. முகாமில் பங்கேற்க அனைவருக்கும் அனுமதி இலவசம்.