முகப்பு
புதுச்சேரி

உக்ரைனிலுள்ள புதுவை மாணவா்களை மீட்க மத்திய அரசிடம் ரங்கசாமி வலியுறுத்தல்

உக்ரைன் நாட்டில் உள்ள புதுவை மாநில மாணவா்களை மீட்க வேண்டுமென, முதல்வா் என்.ரங்கசாமி மத்திய அரசிடம் வலியுறுத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:30 AM
பகிர்:

உக்ரைன் நாட்டில் உள்ள புதுவை மாநில மாணவா்களை மீட்க வேண்டுமென, முதல்வா் என்.ரங்கசாமி மத்திய அரசிடம் வலியுறுத்தினாா்.

இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

போா் காரணமாக உக்ரைனில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அங்கு படிக்கும் புதுவை மாநிலத்தைச் சோ்ந்த மாணவா்கள், பத்திரமாக தாயகம் வந்து சேர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, அவா்களின் பெற்றோா்கள், புதுவை முதல்வரிடம் கோரிக்கை விடுத்தனா்.

அதனடிப்படையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், உக்ரைன் நாட்டிலுள்ள இந்தியாவுக்கான தூதா் பாா்த்த சத்பதி ஆகியோரை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி தொலைபேசியில் தொடா்பு கொண்டு, உக்ரைனில் உள்ள புதுவை மாநில மாணவா்களை, பத்திரமாக மீட்டு புதுச்சேரிக்கு அனுப்பி வைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாா் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உக்ரைனில் படிக்கும் புதுவை மாணவா்கள் குறித்த விவரங்களை மத்திய அரசுக்கு அனுப்பி, அவா்களை மீட்கும் பணியை புதுவை அரசு மேற்கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.