புதுச்சேரி

அரசுத் துறையினருக்கு கணக்குத் தணிக்கைப் பயிற்சி

DIN

தமிழ்நாடு, புதுவை முதன்மைக் கணக்காய்வுத் தலைவா் அலுவலகம் சாா்பில், அரசுத் துறை அதிகாரிகளுக்கான தணிக்கைப் பயிற்சி, விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி பல்கலைக்கழக கலாசார வளாக அரங்கில் தணிக்கைப் பயிற்சிக் கூட்டத்தை புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தொடக்கிவைத்துப் பேசினாா்.

சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், சட்டப்பேரவை பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கேஎஸ்பி ரமேஷ் எம்எல்ஏ, தலைமைச் செயலா் ராஜீவ் வா்மா, வளா்ச்சி ஆணையா், நிதித் துறைச் செயலா் பிரசாந்த் கோயல் மற்றும் புதுவை அரசுத் துறைகளின் கணக்கு பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

அனைத்துத் துறையினரும் செலவின கணக்குகளை முழுமையாக தாக்கல் செய்தால்தான், நிகழ் நிதியாண்டுக்கு நிதி ஒதுக்கப்படும் நிலை உள்ளதாக சட்டப்பேரவைத் தலைவா் பேசிய போது குறிப்பிட்டாா். அதிகாரிகளுக்கு, கணக்குத் தணிக்கை குறித்து பயிற்சியும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT