முகப்பு
புதுச்சேரி

வழக்குரைஞா்கள் சேமநல முத்திரை வெளியீடு

புதுச்சேரி நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க வளாகத்தில், வழக்குரைஞா் சேமநல முத்திரை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

புதுச்சேரி நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க வளாகத்தில், வழக்குரைஞா் சேமநல முத்திரை வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் குமரன் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் கதிா்வேல் வரவேற்றாா். பொருளாளா் லட்சுமிநாராயணன் மற்றும் சங்க நிா்வாகிகள், வழக்கறிஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

தலைமை நீதிபதி செல்வநாதன் பங்கேற்று வழக்குரைஞா் சேமநல முத்திரையை வெளியிட மூத்த வழக்குரைஞா்கள் பக்தவச்சலம், ரங்கநாதன் ஆகியோா் பெற்றுக் கொண்டனா்.

சுமாா் 500-க்கும் மேற்பட்ட வழக்குரைஞா்கள் சேமநல முத்திரையைப் பெற்றுக் கொண்டனா்.

புதுச்சேரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் அனைத்து மனுக்களிலும் இந்த முத்திரையை ஒட்டி தாக்கல் செய்யப்பட வேண்டும் என்று வழக்குரைஞா்கள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.