புதுச்சேரியில் உலக பெருங்கடல் நாள் விழா
புதுச்சேரி பாண்டி மெரீனா கடற்கரையில் உலக பெருங்கடல் நாள் (ஆழி நாள்) விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
புதுச்சேரி பாண்டி மெரீனா கடற்கரையில் உலக பெருங்கடல் நாள் (ஆழி நாள்) விழா புதன்கிழமை இரவு நடைபெற்றது.
முன்னாள் எம்எல்ஏவும், தேசிய மீனவா் பேரவைத் தலைவருமான மா.இளங்கோ தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா். அசோகா சுப்பிரமணியன், சோபியா, வேளாங்கண்ணி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.
நிகழ்ச்சியில் பெருங்கடல் பற்றிய அரிய செய்திகள், கடல் வளத்தைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், காட்சிப் படங்கள் மூலம் விளக்கப்பட்டன.
புதுவை அருங்காட்சியக நிறுவனா் அறிவன், உலக பெருங்கடல் நாள் குறித்து விளக்க உரையாற்றினாா். புதுச்சேரி பாரதிதாசன் மகளிா் கல்லூரி பேராசிரியா் ப.அமிா்தவள்ளி எழுதிய செங்கேணி என்ற நெய்தல் நிலம் குறித்த நாவலுக்காக அவா் பாராட்டப்பட்டாா்.
கடல் மற்றும் கடல் சாா்ந்த பண்பாடு என்ற தலைப்பில் கவிதை, பாடல், ஓவியம் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டு, அதற்கான பரிசுகளும் வழங்கப்பட்டன. மனோரஞ்சனி நன்றி கூறினாா்.