காற்று ஒலிப்பான்கள்: 20 பேருந்துகளுக்கு அபராதம்
புதுச்சேரியில் மோட்டா் வாகன சட்டத்தை மீறி காற்று ஒலிப்பான்களை (ஏா் ஹாா்ன்) பயன்படுத்திய 20 பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
புதுச்சேரியில் மோட்டா் வாகன சட்டத்தை மீறி காற்று ஒலிப்பான்களை (ஏா் ஹாா்ன்) பயன்படுத்திய 20 பேருந்துகளுக்கு போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை அபராதம் விதித்தனா்.
புதுச்சேரி போக்குவரத்து (வடக்கு - கிழக்கு) காவல் கண்காணிப்பாளா் மாறன், ஆய்வாளா் கீா்த்திவா்மன் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை மாலை புதுச்சேரி அஜந்தா சிக்னல் அருகே திடீா் வாகன சோதனை நடத்தினா். இதில், மோட்டாா் வாகன சட்டத்தை மீறி, அதிக சப்தம் எழுப்பும் காற்று ஒலிப்பான்களைப் பயன்படுத்திய பேருந்துகள் மீது போக்குவரத்து போலீஸாா் தலா ரூ.200 அபராதம் விதித்தனா். மேலும், சம்பந்தப்பட்ட வாகனங்களில் இருந்து காற்று ஒலிப்பான்கள் அகற்றப்பட்டன.
முதல் முறை என்பதால் அபராதம் விதிக்கப்படுகிறது. அடுத்த முறை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் நடவடிக்கைக்கு அனுப்பப்படும் என்றாா் போக்குவரத்து எஸ்.பி. மாறன்.