முகப்பு
புதுச்சேரி

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம்

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:30 AM
பகிர்:

புதுச்சேரி அருகேயுள்ள வில்லியனூரில் திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வில்லியனூா் ஸ்ரீகோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரா் கோயில் தோ் திருவிழா கரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை.

நிகழாண்டு பிரம்மோற்சவ விழா கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6-ஆம் தேதி பாரிவேட்டை நடைபெற்றது. 10-ஆம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி அம்பாளுடன் எழுந்தருளினாா்.

புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், தேனீ சி.ஜெயக்குமாா், க.லட்சுமிநாராயணன், எஸ்.சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா், எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா உள்ளிட்டோா் தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தைத் தொடக்கிவைத்தனா்.

எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோா் திரண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனா். தொடா்ந்து, நான்கு மாட வீதிகள் வழியாக வந்து நிலையத்தை தோ் வந்தடைந்தது.

தெப்பல் உற்சவம் ஞாயிற்றுக்கிழமையும் (ஜூன் 12), விடையாற்றி உற்சவம் செவ்வாய்க்கிழமையும் நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.