புதுச்சேரி

புதுச்சேரி மதகடிப்பட்டியில் களைகட்ட தொடங்கிய வாரசந்தை!

DIN

புதுச்சேரி: புதுச்சேரி மதகடிப்பட்டியில்  வாரசந்தை களைகட்ட தொடங்கியுள்ளது. ஏராளமான பொதுமக்கள் வந்து குறைந்த விலையில் மாடுகள், பழ வகைகளை வாங்கிச்சென்றனர்.

புதுச்சேரி மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்கிழமை தோறும் நடைபெறுவது வழக்கம். இந்த சந்தையில் தமிழகம் மற்றும் புதுவையில் இருந்து ஏராளமான வியாபாரிகள் மாடுகளை  விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதே போல் விவசாயிகள் தங்களின் நிலங்களில் விளைவித்த காய்கறி, பழங்கள் உள்ளிட்டவைகளை கொண்டு விந்து விற்பனை செய்வர். 


மாட்டுச்சந்தை காலை 4 மணி முதல் 10 மணி வரை நடைபெறும். அதன்பிறகு காய்கறி சந்தை செயல்படத் தொடங்கும். இந்த சந்தையில் பலாப்பழ சீசன், மாம்பழ சீசன் தொடங்கி உள்ளதால் ஏராளமான விவசாயிகள் பலாப் பழங்களைக் கொண்டுவந்து அடுக்கி வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். 

பலாப்பழம் ஒரு பழம் 100 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை விலை போனது. மாம்பழம் கிலோ 40 ரூபாயில் இருந்து 100 ரூபாய்க்கு விலை போனது. தக்காளி பழம் 2 கிலோ 100 ரூபாய், வெங்காயம் 7 கிலோ 100 ரூபாய்க்கும் விலை போனது. வெயில் காலம் தொடங்கி உள்ளதால் வியாபாரிகள் கொட்டகைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.

ஒரே இடத்தில் அனைத்து பொருட்களும் விற்பனைக்கு வைத்துள்ளதால் ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன்  வாங்கிச்சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

SCROLL FOR NEXT