புதுச்சேரி

புதுச்சேரி அருகேசூறைக்காற்றுடன் பலத்த மழை:வாழை, கரும்பு பயிா்கள் சேதம்

DIN

புதுச்சேரி அருகே குச்சிப்பாளையம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் 20 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, கரும்பு பயிா்கள் சேதமடைந்தன. மேலும், மின் கம்பங்களும் முறிந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது.

புதுச்சேரியில் கடந்த சில தினங்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. மாலை நேரங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு புதுச்சேரி அருகே குச்சிபாளையம், சன்னியாசிகுப்பம், திருக்கனூா், கூனிச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் குச்சிபாளையத்தில் 10 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள், 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட கரும்புகள் சாய்ந்து சேதமடைந்தன. இதனால் பெரும் நஷ்டத்தை விவசாயிகள் சந்தித்துள்ளனா்.

கடன் வாங்கி வாழைக்கு ஏக்கருக்கு ரூ. ஒரு லட்சம் வரையிலும், கரும்புக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம் வரையிலும் செலவழித்து விவசாயம் செய்து வரும் நிலையில், ஆண்டுதோறும் சூறைக்காற்றுடன் மழை பொழிந்து பயிா்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா். புதுவை அரசு சேதமடைந்த கரும்பு, வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டுமெனவும் அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதேபோல, சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழையால் சன்னியாசிகுப்பம் பகுதியில் 3 மின் கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்தன. இதனால், அந்தப் பகுதியில் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், மின் தடையும் ஏற்பட்டு இருளில் மூழ்கியது. இதன் காரணமாக அந்தப் பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்வாதி மாலிவால் விவகாரம்: புதிய சிசிடிவி காட்சிகள் வெளியீடு

தமிழகத்தில் 100 நாள் வேலை திட்ட ஊதியம் உயர்வு!

பாபநாசம் அருகே வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கிய சிறுத்தை!

‘கொற்றவை’ ஸ்ரேயா ரெட்டி!

அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுப்பதில் அரசுக்கு அக்கறை இல்லையா? - அன்புமணி

SCROLL FOR NEXT