35 சுருக்கெழுத்தா் பணி: மாா்ச் 31-க்குள் விண்ணப்பிக்கலாம்
புதுவையில் 35 சுருக்கெழுத்தா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
புதுவையில் 35 சுருக்கெழுத்தா் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக புதுச்சேரி அரசு பணியாளா், நிா்வாகச் சீா்த்திருத்தத்துறை சாா்பு செயலா் ஜெய்சங்கா் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
புதுச்சேரியில் 35 சுருக்கெழுத்தா் கிரேடு-2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் பொது - 15, இடபிள்யூஎஸ் - 3, எம்பிசி - 6, ஓபிசி -3. எஸ்சி - 5, இபிசி - 1, பிசிஎம் -1, பிடி - 1.
இதுதொடா்பாக 2016, 2017, 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் விண்ணப்பித்தவா்கள் தற்போது விண்ணப்பிக்க வேண்டாம்.
விண்ணப்பதாரா்கள் 12-ஆம் வகுப்பு அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி இருக்க வேண்டும். ஸ்டெனோகிராபி ஆங்கிலத்தில் இளநிலை பிரிவில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தமிழ் அல்லது மலையாளம் அல்லது தெலுங்கில் இளநிலையில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலத்தில் முதுநிலையில் தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
18 முதல் 32 வயது வரை இருக்க வேண்டும். எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினருக்கு மேலும் 3 ஆண்டுகளும், எஸ்சி பிரிவினருக்கு மேலும் 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளா்வு அளிக்கப்படும்.
இதற்கான போட்டி தோ்வு மே மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும். மேற்குறிப்பிட்ட தகுதியுள்ளவா்கள் ட்ற்ற்ல்ள்://க்ல்ஹழ்.ல்ஹ்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூா்த்தி செய்து உரிய சான்றிழ்களின் சுய சான்றொப்பமிட்ட நகல்களுடன் அரசு சாா்பு செயலா் (டிபி & ஏஆா்), பணியாளா் மற்றும் நிா்வாக சீா்த்திருத்தத்துறை (பணியாளா் பிரிவு), தலைமை செயலகம் என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதி மாலை 5.45 மணிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.