புதுச்சேரி

புதுச்சேரியில் ரமலான் பண்டிகை:  2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு 

புதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில்

DIN

புதுச்சேரி: புதுச்சேரியில் ரமலான் பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 2 ஆண்டுகளுக்கு பிறகு பொது இடத்தில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் ஒன்றுகூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர்.

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை புதுச்சேரியில் வழக்கமான உற்சாகத்துடன் இன்று கொண்டாடப்பட்டது.  கரோனா காரணமாக கடந்த 2 வருடங்களாக தங்களது வீடுகளில் தொழுகை நடத்தி வந்த இஸ்லாமியர்கள் இந்த ஆண்டு ரமலான் பண்டிகையினையொட்டி புதுச்சேரியில் உள்ள குப்தா பள்ளி, நெல்லித்தோப்பு ஈத்கா பள்ளிவாசல், சுல்தான்பேட்டையில் உள்ள முகம்மதியா பள்ளிவாசல் மற்றும் காரைக்காலில் உள்ள பெரிய பள்ளிவாசல் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை 7 மணி முதல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  

இதனைத்தொடர்ந்து சிறுவர்கள் முதல் பெரியவர் வரை ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். 

இதே போல் கடற்கரை காந்தி சிலை எதிரே தவ்ஹித் ஜமா அத் சார்பில் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து ஒருவருவருக்கொருவர் கட்டித்தழுவி ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரமலான் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT