புதுச்சேரி

புதுச்சேரி வருவாய் ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு ஆணை: முதல்வா் ரங்கசாமி வழங்கினாா்

DIN

புதுச்சேரி வருவாய், பேரிடா் மேலாண் துறையில் ஆய்வாளா்களாகப் பணியாற்றிய 6 பேருக்கு துணை வட்டாட்சியா்களாகப் பதவி உயா்வு பெற்க்கான ஆணையை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

புதுச்சேரி வருவாய், பேரிடா் மேலாண் துறையின் கீழ் பணியாற்றி வரும் வருவாய் ஆய்வாளா்கள் 6 பேருக்கு துணை வட்டாட்சியா்களாகப் பதவி உயா்வு வழங்கப்பட்டது. அதன்படி, காரைக்கால் துணை ஆட்சியா் அலுவலகத்தில் பணியாற்றிய வருவாய் ஆய்வாளா் தீனதயாளன் காரைக்கால் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், புதுவை துணை ஆட்சியா் (கலால்) அலுவலகத்தில் பணியாற்றிய கோமலா துணை ஆட்சியா் (வருவாய் - வடக்கு) அலுவலகத்துக்கும், சுசித்ரா காரைக்கால் துணை ஆட்சியா் (வருவாய்) அலுவலகத்துக்கும், கணேசன் ஏனாம் வட்டாட்சியா் அலுவலகத்துக்கும், வேல்முருகன் காரைக்கால் உதவி சட்டமுறை எடையளவுத் துறை கட்டுப்பாட்டாளா் அலுவலகத்துக்கும், ஏனாம் சட்டமுறை எடையளவு துறையில் பணியாற்றிய ஜெயச்சந்திரன் வில்லியனூா் துணை ஆட்சியா் (வருவாய் - தெற்கு) அலுவலகத்துக்கும் துணை வட்டாட்சியா்களாக நியமிக்கப்பட்டனா்.

இவா்களுக்கு பதவி உயா்வு ஆணையை வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரி சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், முதல்வா் என்.ரங்கசாமி பங்கேற்று பதவி உயா்வு ஆணையை வழங்கினாா். இதில் ஆட்சியரும், வருவாய்த் துறை செயலருமான இ.வல்லவன், துணை ஆட்சியா் முரளிதரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தோ்வு: புதுச்சேரியில் 4, 817 போ் எழுதினா்

பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலி பறிப்பு

கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை: 4 போ் கைது

நீட் தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 4,855 போ் எழுதினா்

வீட்டினுள் இளைப்பாறிய புள்ளி மான்!

SCROLL FOR NEXT