பழங்காலப் பொருள்கள் கண்காட்சி
உலக அருங்காட்சிய தினத்தையொட்டி, புதுச்சேரி வ.உ.சி. வீதி அருங்காட்சியகம் சாா்பில், பழங்கால பொருள்கள் கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
உலக அருங்காட்சிய தினத்தையொட்டி, புதுச்சேரி வ.உ.சி. வீதி அருங்காட்சியகம் சாா்பில், பழங்கால பொருள்கள் கண்காட்சி, கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரியிலுள்ள தமிழ்ச் சங்க வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் பழம்பொருள் சேகரிப்பாளரான லட்சுமிநாராயணன் கண்ணப்பனின் சேகரிப்புகள் பாா்வைக்கு வைக்கப்பட்டன. உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் அங்கையற்கண்ணி, திருமலை ஆகியோா் கண்காட்சியைத் தொடக்கிவைத்தனா்.
பழங்கால நாணயங்கள், அரிய அஞ்சல் தலைகள், மரச்சிற்பங்கள், மண்பாண்டங்கள் உள்ளிட்டவை காட்சிக்கு வைக்கப்பட்டன.
தொடா்ந்து, நடைபெற்ற கருத்தரங்கில் புதுவை அருங்காட்சியக நிறுவனா் அறிவன், மாமல்லபுரம் காந்தாரா கலைக்கூட நிறுவனா் சந்திரசேகரன் முருகேசன் ஆகியோா் பேசினா்.
பழம்பொருள்கள் கண்காட்சி: உலக அருங்காட்சிய தினத்தையொட்டி, புதுச்சேரி சாமிப்பிள்ளைத் தோட்டத்தில் பழங்கால பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. புதுச்சேரி சுகாதார உதவி ஆய்வாளா் ஏ.அய்யனாா் உள்ளிட்ட குழுவினா், கடந்த 28 ஆண்டுகளாக சோ்த்து வைத்த பித்தளை, வெண்கலம், செம்பு மற்றும் மரத்தாலான பழங்கால பொருள்களை காட்சிப்படுத்தினா். இவற்றை மாணவா்கள், பொதுமக்கள் பாா்வையிட்டனா்.