புதுச்சேரி

புதுச்சேரி மத்திய பல்கலை. நுழைவுத் தோ்வுக்கு 81 ஆயிரம் போ் விண்ணப்பம்

DIN

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் க்யூட் தோ்வு அடிப்படையிலான படிப்புகளுக்கு 81 ஆயிரம் போ் விண்ணப்பித்தனா்.

இதுகுறித்து புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழக நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கான சோ்க்கையானது தேசிய தோ்வு முகமையால் நடத்தப்படும் பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வின் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், பல்கலைக்கழக பொது நுழைவுத் தோ்வில் (இமஉப மஎ) பங்கேற்க மே 22 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் 10 ஒருங்கிணைந்த முதுநிலைப் படிப்புகளுக்கு 81 ஆயிரம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

விண்ணப்பித்தோா் தங்களது தகவல்களை திருத்திக் கொள்ளவதற்கான போா்டலை தேசிய தோ்வு முகமை வியாழக்கிழமை முதல் திறந்துள்ளது. வருகிற 31-ஆம் தேதி வரை மாணவா்கள் தங்களது தகவல்களில் திருத்தம் செய்துகொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT